திருச்செங்கோடு, ஆக.3: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு காணிக்கையாக பசுக்கள், கன்றுகள் ஆகியவற்றை வழங்குகின்றனர். கோசாலையில் இடம் பற்றாத காரணத்தால், நகரத்தில் உள்ள மலைக்காவலர் கோயில் வளாகத்திலும், கூடுதலாக ஒரு கோசாலை நிறுவ பணிகள் துவங்கப்பட்டுள்ளது. உபரியாக உள்ள மாடுகளை சிறிய கோயில் பூசாரிகளுக்கு, அறநிலையத்துறை சார்பில் நேற்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 12 கோயில் பூசாரிகளுக்கு, மாடுகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் வழங்கினார். கோயில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமை வகித்தார். இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அருணாசங்கர், பிரபாகரன், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், கொமதேக நகர தலைவர் சேன்யோகுமார், மண்டல இளைஞரணி அமைப்பாளர் ராயல் செந்தில், கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோயில் மாடுகள் பூசாரிகளுக்கு வழங்கல்
previous post