ஆண்டிமடம், அக்.20: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை பகுதியில் அழகு சுப்பிரமணியர் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் பூசாரியான தண்டபாணி வழக்கம்போல் நேற்று பகல் பூஜை முடிந்ததும் கோயில் நடையை சாத்தி விட்டு சென்று விட்டார். மீண்டும் மதிய நேரம் நடை திறக்க வந்தபோது கோயிலின் பின்பக்க கேட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூபாய் ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுள்ளனர்.
மேலும் கோயில் சன்னதியின் பூட்டை உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வந்தனர். இதில் அழகாபுரம் தெற்குத்தெருவை சேர்ந்த செல்லமுத்து மகன் வீராசாமி (32), அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மணிகண்டன் (37) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.