காரிமங்கலம், ஆக.18: காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியில் மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர். இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்து, கோயிலை பூசாரி பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள், கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
previous post