சாத்தான்குளம், அக். 4: வெங்கடேஸ்வரபுரம் சின்னபிள்ளை அம்மன் கோயில் கொடை விழா 3 நாட்கள் விமரிசையாக நடந்தது. முதல் நாள் திருவிளக்கு பூஜை, 2ம் நாள் காலை பொய் சொன்ன மெய்யன் சாஸ்தா கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், அபிஷேக பூஜை, உச்சிக்கால பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், அம்மன் கரகம் வீதியுலா, உண்டியல் காணிக்கை சிறப்பு பூஜை, நேமிசம் எடுத்து வருதல், ஆயிரங்கண் பானை எடுத்து வருதல், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 3ம் நாள் பொங்கலிட்டு வழிபடல், சிறப்பு பூஜை, படைப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து சுவாமி உணவு எடுத்தல் வைபவம் நடந்தது.