அரூர், ஜூன் 7: அரூர் அருகே நரிப்பள்ளி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தின் குலதெய்வமான காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. 29ம் தேதி நவபாலிகை பயிரிடுதல், காமாட்சி அம்மனை வழிபடுதல் தீபாராதனை நடந்தது. இதன் பின்னர் கடந்த 5ம் தேதி விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, அனுபூஜை நடந்தது. தொடர்ந்து தீர்த்தக்குடம் ஊர்வலம், நவபாலிகை, கோபுர கலசம் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று அதிகாலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து, கோயில் மீது பொருத்தப்பட்ட கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் வலம்புரி செல்வ விநாயகர், பாலமுருகன், பிராமி, வைஷ்னவி, விஷ்ணு துர்கை ஆகிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
கோயில் கும்பாபிஷேக விழா
0
previous post