திருத்தணி, மே 27: மேல் திருத்தணியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (36), திருத்தணி முருகன் கோயிலில் கடை நிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சரவணப் பொய்கை குளம் அருகில் கோயிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் பணியில் இருந்தர். இரவு 11 மணியளவில் திருத்தணி செட்டி தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் லோகேஷ் (28) என்பவர் குடிபோதையில் சரவணப் பொய்கை தங்கும் விடுதிக்கு உள்ளே சென்று விடுதியில் தங்கியுள்ள பக்தர்களுக்கு இடையூறு செய்தார். அதனை தட்டிக் கேட்ட கோயில் ஊழியர் பாலகிருஷ்ணனை, லோகேஷ் தாக்கியதில் ரத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார். லோகேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.