வில்லிபுத்தூர், பிப்.22: வில்லிபுத்தூர் அருகே கோயிலில் உண்டியலை உடைத்த திருடர்கள் பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர்.வில்லிபுத்தூர் அருகே திருமுக்குளத்தின் அருகே பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதிகாலை பூஜை செய்வதற்காக பூசாரி கோபி வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோயில் பூசாரி வில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருட முயற்சி செய்தவர்கள் உண்டியலை உடைத்து பார்த்தபோது அதில் பணம் இல்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.