திண்டுக்கல், மார்ச் 14: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு மங்களப்புள்ளியில் அமைந்துள்ளது பழமைவாய்ந்த நரசிம்ம பெருமாள் கோயில். நேற்று மாசி பவுர்ணமியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் 131 வகையான மரங்கள், 12 ராசி, 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரம் முறையாக வாஸ்து பூஜையுடன் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அபிராமி அம்மன்கோயில் அறங்காவலர்கள் வீரக்குமார், மலைச்சாமி, திமுக பொருளாளர் மீடியா சரவணன், மணியம் அரவிந்தன், அர்ச்சகர் ரிஷிகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோயிலில் மரக்கன்று நடும் விழா
0
previous post