அண்ணாநகர், மே 30: கோயம்பேடு மார்க்கெட்டில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக, அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.
இந்நிலையில், அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி இதுதொடர்பாக நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பேரில், அங்காடி நிர்வாக ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதுடன், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர். மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுப்படும், என்று அங்காடி நிர்வாகம் எச்சரித்துள்ளது.