அண்ணாநகர், செப்.1: கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் மற்றும் ஓசூர், திண்டுக்கல், மதுரை, நீலக்கோட்டை, திருச்சி, சேலம், மதுரை, வேலூர் மற்றும் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால், நேற்று காலை சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், அனைத்து பூக்களின் விலையும் சரிந்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ₹450க்கும், ஐஸ் மல்லி ₹400க்கும், கனகாம்பரம் ₹800க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ₹300க்கும், அரளி பூ ₹100க்கும், சாமந்தி ₹80க்கும், சம்பங்கி ₹110க்கும் விற்பனை செய்யப்பட்டது. நாளை (2ம் தேதி) அமாவாசை என்பதால் மீண்டும் அனைத்து பூக்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.