Sunday, February 25, 2024
Home » கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காத 15 கடைகளுக்கு சீல்: அங்காடி நிர்வாகம் அதிரடி

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காத 15 கடைகளுக்கு சீல்: அங்காடி நிர்வாகம் அதிரடி

by Ranjith

 

அண்ணாநகர், டிச.25: கோயம்பேட்டில் உரிமம் புதுப்பிக்க தவறிய 15 கடைகளுக்கு அங்காடி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காமல் ஏராளமன கடைகள் செயல்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தலைமையில் அதிகாரிகள், காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அதில், 120 கடைகளின் உரிமம் புதுப்பிக்காததை கண்டறிந்தனர்.

இதையடுத்து அங்காடி நிர்வாக சார்பில், கடை உரிமம் புதுப்பிக்க கோரி அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி பலமுறை எச்சரித்தனர். இருப்பினும் வியாபாரிகள் உரிமம் புதுப்பிக்க முன்வரவில்லை. இதனால், கடந்த 21ம் தேதி அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் தலைமையில் அதிகாரிகள் உரிமம் புதுப்பிக்க தவறிய 8 கடைகளுக்கு முதற்கட்டமாக சீல் வைத்தனர். அப்போது சில வியாபாரிகள், கடையின் உரிமம் புதுப்பித்தனர். இந்நிலையில், 2ம் கட்டமாக நேற்று முன்தினம் 7 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால், மார்க்கெட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் கூறுகையில், ‘‘காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்தபோது சுமார் 120 கடைகள் உரிமம் புதுப்பிக்காமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகள் உரிமம் புதுப்பிக்க முன்வரவில்லை என்பதால் முதற்கட்டமாக கடந்த 21ம் தேதி 8 கடைகளுக்கு சீல் வைத்தோம்.

சில வியாபாரிகள் கடையின் உரிமம் புதுப்பித்தனர். ஆனால் சில பேர் உரிமம் புதுப்பிக்க தவறிய பட்சத்தில் 2ம் கட்டமாக மேலும் 7 கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம். இதுவரை 15 கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம். மீதமுள்ள கடைகளின் உரிமம் புதுப்பிக்க தவறினால் அனைத்து கடைகளுக்கும் விரைவில் சீல் வைக்கப்படும்,’’ என்றார்.

You may also like

Leave a Comment

14 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi