தேவாரம், ஜூன் 3: கோம்பை பகுதிகளில் பந்தல் விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்த்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் காய்கறி விவசாயங்கள் நடந்து வந்தன. இதில் சுமார் 1000 ஆயிரம் ஏக்கர் வரை புடலங்காய் – கோவக்காய், பந்தல் அவரை, பாகற்காய், உள்ளிட்ட விவசாயம் நடந்தது. இடைக்காலங்களில் மழை இல்லாத நிலையில் பந்தல் விவசாயம் சுருங்கியது.
தொடர்ந்து மழையும் இல்லாததால் அனைத்து கண்மாய்கள், குளங்களிலும் மழை இல்லாத நிலையில் வறண்டன. புடலங்காய் உள்ளிட்ட பந்தல் விவசாயத்தை செய்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். இதனால் பந்தல் விவசாயத்தின் பரப்பு குறைந்தாலும், இதனை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனை ஊக்குவிக்க வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.