கோபி, மே 15: கோபி நகராட்சிக்குட்பட்ட வாய்க்கால் ரோடு, ஐந்து சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டு இருப்பதால், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற யாரும் முன் வராத நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் சுபாஷினி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் நிருபன் சக்கரவர்த்தி, சவுந்திரராஜன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, காவல்துறை பாதுகாப்புடன் 50க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.