கோபி, ஆக.7: திராவிடர் கழக கோபி மாவட்ட தலைவராக வழக்கறிஞர் மு.சென்னியப்பன் நியமிக்கப்பட்டார். கோபி மாவட்ட திராவிடர் கழகத்தில் நிர்வாக ரீதியாக பலருக்கும் பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டது. கோபி மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவராக இருந்த ந.சிவலிங்கம் மாவட்ட காப்பாளராகவும், அவருடன் ரா.சீனிவாசன், பெ.ராஜமாணிக்கம் ஆகியோர் காப்பாளர்களாகவும், மாவட்ட செயலாளராக இருந்த மனிதம் சட்ட உதவி மையம் நிறுவனர் வழக்கறிஞர் மு.சென்னியப்பன் மாவட்ட தலைவராகவும், மாவட்ட துணைத்தலைவராக பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பொன்.முகிலன் ஆகியோரும், மாவட்ட செயலாளராக கோபியை சேர்ந்த வெ.குணசேகரனும், மாவட்ட துணைச் செயலாளர்களாக நம்பியூரை சேர்ந்த வெ.ப.அரங்கசாமி, கெம்ப நாய்க்கன் பாளையத்தை சேர்ந்த க.மூர்த்தி ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக க.யோகானந்தமும், கா.மு.பூபதிநாதனும் நியமிக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்து உள்ளார்.
கோபி மாவட்ட திராவிடர் கழக தலைவர் நியமனம்
previous post