கோபி,ஜூன் 10: ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென கோபி மற்றும் அதைச்சுற்றி உள்ள கரட்டூர், கரட்டடிபாளையம், குள்ளம்பாளையம், மொடச்சூர், புதுப்பாளையம் என பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.