திருவையாறு,பிப்.24: திருவையாறு அருகே கோனேரிராஜபுரம் புனித பதுவை அந்தோணியார் புதிய ஆலயம் திறப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமை வகித்தார். மணத்திடல் பங்கு தந்தை பிரான்சிஸ் அமலதாஸ் முன்னிலை வகித்தார். அந்தோணிசாமி வரவேற்றார்.புதிய ஆலயம் அருள்பொழிவு, திருப்பலி ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் முன்னாள்ஆயர் அந்தோனிசாமி மரையுரையாற்றினார். ஆலய அலங்கரிப்பு மற்றும் மேடை நடன நிகழ்ச்சிக்கு உதவிய மணத்திடல் அருட் சகோதரிகளுக்கு பாராட்டு பிரான்சிஸ் அமலதாஸ், பங்கு குரு. கோனேரிராஜபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆலயம் ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் அருள்பொழிவு செய்து, அமெரிக்கா நன்கொடையாளர் சீசர் ஜூலேட்டா அவரது மகன் டேவிட் ஜூலேட்டா இருவரும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள். புதிய ஆலய அருள்பொழிவு திருப்பலி நமது இன்னாள் மற்றும் மேனாள் குடந்தை ஆயர்களால் மற்றும் குடந்தை மறைமாவட்ட இயக்குநர் செல்வராஜ் அடிகளார் மற்றும் குருக்களால் நிறைவேற்றப்பட்டது.