கோத்தகிரி, ஆக.31: கோத்தகிரியில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு வட்டார தலைவர் ரவிக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3ம் நபர் கணக்கீட்டை கண்டித்தும், அதில் பிஎட் மாணவர்களை கொண்டு கணக்கீடு செய்வதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார செயலாளர் ஆனந்தன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.