கோத்தகிரி, ஆக.26: கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என குன்னூர் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் உள்ள நாசருதின் (50) என்பவரது கடையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு இருந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் நாசருதினை கைது செய்தனர். பின்னர் கோத்தகிரி நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.