வாழப்பாடி, மே 21: வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் கோதுமலை தடுப்பணை நிரம்பி வழிகிறது. வாழப்பாடி, பேளூர், துக்கியாம்பாளையம், மாரியம்மன்புதூர், மேலூர், பள்ளத்தாதனூர், மேட்டுப்பட்டி, வெள்ளாளகுண்டம், காரிப்பட்டி, நீர்முள்ளிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் கோதுமழை தடுப்பணையில் தற்பொழுது தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோதுமலை தடுப்பணை நிரம்பியது
73
previous post