சேலம், ஆக.23: சேலம் மாநகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை பெரியமாரியம்மன் கோயிலில், ஆடித்திருவிழா கடந்த ஜூலை 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 16ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவடைந்தது. விழாவில், சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடித்திருவிழாவிற்கு பிறகு, நேற்று கோயிலில் உள்ள 10 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 8 தற்காலிக உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், பக்தர்கள் என 50க்கும் மேற்பட்டோர், உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தமாக ₹26 லட்சத்து 58 ஆயிரத்து 947 பணமும், 65 கிராம் தங்கமும், 454 கிராம வெள்ளியும் உண்டியலில் கிடைக்கப்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோட்டை பெரியமாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு
previous post