நீடாமங்கலம், ஜுன். 6: நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் கோடை சாகுபடி நெல் இயந்திர அறுவடை மும்முரமாக நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 20,000 ஏக்கரில் கோடை சாகுபடி நெல் பயிர் நிலத்தடி நீரில் மின் மோட்டாரை பயன் படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் கோடை சாகுபடி செய்துள்ள சித்தமல்லி மேல் பாதி, கடம்பூர், பரப்பனா மேடு, காளாச்சேரி, பூவனூர், ராயபுரம் ,ராஜப்பையன், சாவடி, வேளாண், அறிவியல் நிலைய வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை சாகுபடியை நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டாரில் முன்பட்டம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சுமார் 20,000 ஏக்கரில் சாகுபடி செய்துவரும் நெல் பயிர்கள் தற்போது இயந்திரங்கள் மூலம் மும்முரமாக அறுவடை நடைபெற்று வருகிறது.