மதுரை, மே 15: கோடை உழவுக்கான அவசியம் குறித்து வேளாண் துறையினர் கூறியுள்ளதாவது: கோடை கால உழவில் மண் கிளறப்படுவதால் அதில் மழைநீர் விழும் போது நிலத்தின் நீர்ப்பிடிப்பு திறன் மேம்படுகிறது. அடிமண் மேல் பகுதிக்கும் மேல்மண் அடிப்பகுதிக்கும் இடம் மாறுகிறது. இதனால் நல்ல காற்றோட்டம் கிடைப்பதுடன், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் வளர்வதற்கு உதவுகிறது. மண்ணின் இறுக்கம் தளர்ந்து பயிர் சாகுபடியின் போது செடிகளின் வேர் எளிதாக நிலை நிறுத்தப்படும். தேவையற்ற களைகள் அகற்றப்படும். கோரை போன்ற புல் வகைகள் இருந்தால், அவற்றின் கிழங்குகளை குத்தூசி கொண்டு ெவட்டி எடுக்கலாம். மழை நீரை நன்றாக உறிஞ்சி உள்வாங்கி ஈரத்தை தக்க வைத்துக்கொள்ளும். பூச்சி மற்றும் நோயில் இருந்து பயிரை பாதுகாக்கவும் கோடை உழவு பெரிதும் உதவும். இவ்வாறு கூறினர்.
கோடை உழவு மிக அவசியம்: வேளாண்துறை தகவல்
0
previous post