தொண்டி, ஏப்.4: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை சுமார் 1 மணி நேரம் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர பயந்து வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் வழிந்தோடியதால், வெப்பம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
கோடையில் இதமான மழை
78