Saturday, July 13, 2024
Home » கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கு : யுவராஜ் உள்ளிட்ட 10 குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை ? .. பிற்பகலில் அறிவிக்கிறது சிறப்பு நீதிமன்றம்!!

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கு : யுவராஜ் உள்ளிட்ட 10 குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை ? .. பிற்பகலில் அறிவிக்கிறது சிறப்பு நீதிமன்றம்!!

by kannappan

மதுரை: கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என கூறியுள்ள மதுரை சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனை விவரத்தை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.வழக்கின் பின்னணி சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். கடந்த 23.6.2015ல் காதலர்கள் இருவரும் வெளியில் சென்றனர். அப்போது கோகுல்ராஜ் திடீரென மாயமானார். திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் தரப்பினர் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் கொலையாகி கிடந்தார். இந்த ஆணவ படுகொலை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதில் ஒருவர் இறந்து விட்டார். அமுதரசு(49) தலைமறைவானார். மீதமுள்ள யுவராஜ், அருண், குமார்(எ) சிவக்குமார், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு(எ)தர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சுரேஷ் ஆகிய 15 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இங்கு முறையாக விசாரணை நடக்க வாய்ப்பில்லை என்பதால், வழக்கின் விசாரணையை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, கோகுல்ராஜின் தாய் சித்ரா, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், நாமக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணையை, மதுரை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றத்திற்கு (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) மாற்றி கடந்த 8.5.2019ல் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அங்கு 3.6.2019ல் முதல் விசாரணை நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கின் மீது மார்ச் 5ல் தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்தார்.அதன்படி இந்த வழக்கில் நீதிபதி டி.சம்பத்குமார் தீர்ப்பளித்தார். நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ், அருண், குமார்(எ) சிவக்குமார், சதீஷ்குமார், ரகு(எ)ஸ்ரீதர்,  ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் மீதான கூட்டுச்சதி, கொலை, ஆள் கடத்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுகின்றனர்.சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்படுகின்றனர்,’ என தெரிவித்தார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 10 பேருக்கான தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சம்பத் குமார் தெரிவித்துள்ளார். …

You may also like

Leave a Comment

19 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi