திண்டுக்கல், ஜூன் 30: திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது நல்லாம்பட்டி ராஜா குளக்கரை அருகே சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு கும்பலை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் நல்லாம்பட்டியை சேர்ந்த பாலச்சந்தர், தனுஷ் குமார், லோகநாதன், கிழக்கு மரியநாதபுரம் பால் தினகரன் (32), மேற்கு மரியநாதபுரம் நவீன் (30) என்பதும், வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.