கொள்ளிடம், பிப். 15: கொள்ளிடம் பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 தினங்களாக நள்ளிரவு முதல் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. குளிரும் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக மாலை 6மணி முதல் பனிப்பொழிவு துவங்கி இரவு முதல் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது.
இரவு 8 மணி அளவில் வாகனங்கள் சாலையில் செல்லும்போது சாலை முழுமையும் பனிமூட்டமாக இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வந்தனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மாலை முதல் காலை வரை அதிக பனிப்பொழிவும் கடும் குளிரும் இருந்து வந்தாலும் பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் வறட்சியான தட்பவெட்ப நிலை நிலவி வருகிறது.