திருச்சி, ஆக.13: கொள்ளிடம் ஆற்றில் சலவை தொழிலாளர்களுக்கு துணி துவைக்கும் இடம் அமைப்பதற்கு மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி கொள்ளிடக் கரையில் உள்ள பஞ்சகறையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவில் வரும் நேரங்களில் சலவைத் தொழிலாளர்கள் துணி துவைப்பதற்கு அதிகம் சிரமப்படுகின்றனர்.
இதனை தவிர்க்க சலவை தொழிலாளர்களுக்கான துணி துவைக்கும் இடம் அமைப்பதற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையர் ஜெயபாரதி, உதவி செயற் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோருடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.