நாமக்கல், செப்.2: நாமக்கல் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்ஐ துர்கைசாமி மற்றும் போலீசார் கொல்லிமலை பகுதியில் சாராய வேட்டை நடத்தினர். இதில் வளப்பூர்நாடு செல்லிப்பட்டியை சேர்ந்த குப்பன் (54) என்பவர் தனது தோட்டத்தில் சாராயம் காய்ச்சி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே சாராயம் காய்ச்சியது தொடர்பாக 2 வழக்குகள் உள்ளது.