நித்திரவிளை, ஜூன்3: கொல்லங்கோடு அருகே வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (31). சம்பவத்தன்று இரவு சுமார் 7 மணியளவில் இவர் தனது பைக்கை வீட்டின் முன்னால் நிறுத்தி விட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் இரவு 8 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த போது வெளியே நிறுத்தியிருந்த பைக் காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பைக்கை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து விஷ்ணு கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு போன பைக்கை தேடி வருகின்றனர்.
கொல்லங்கோடு அருகே பைக் திருட்டு
0
previous post