பெரம்பலூர், ஆக. 23: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக கைகளில் மெழுகு வர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்குவங்க மாநிலத்தில் முதுநிலை பெண் மருத்துவ பயிற்சியாளர் கொடூரமாக கற்பழித்து படுகொலை செய்யப் பட்டதைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட, சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தி, கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கன்வினர் செல்வி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலாளர் அகஸ்டின் கண்டன உரையாற்றினார். இதில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கொளஞ்சி, பிரமிளா, ரேணுகா, சாந்தி, பார்வதி, வேணி, மகேஸ்வரி, தையல் நாயகி உள்பட 15-பேர் கலந்து கொண்டனர்.