திருவண்ணாமலை, ஜூன் 24: கொலை வழக்கு விசாரணையில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருவண்ணாமலை கோர்ட் உத்தரவிட்டது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஜெயபிரகாஷ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அப்போது, அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக இவர் பணிபுரிந்தார்.
இந்நிலையில், பணியிட மாறுதலில் சென்ற பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து இவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நேற்று உத்தரவிட்டார்.