சிவகங்கை, செப். 4: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேவுள்ள நாச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகள் ஜெயசூர்யா (25), சுபாஷ் (22). இருவரையும் மஞ்சுவிரட்டு போட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஜூன் 30 அன்று காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் ஒரு கும்பல் கொலை செய்தது. கொலை தொடர்பாக காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து திவாகர் (23), சந்தோஷ் (23), ராம்ஜி (21), யுவராஜ் (22), அபினேஷ் (22), அருண்குமார் (30) மற்றும் மதுமதி (26) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
புதுப்பட்டியை சேர்ந்த மதன் (21), சிவகங்கை வேலாயுத சுவாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி (21), செல்வகுமார் (28) கொட்டகுடியை சேர்ந்த மணிகண்டபிரபு (22) ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியான மதன், முத்துப்பாண்டி, செல்வகுமார், மணிகண்ட பிரபு ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்க்ரே கலெக்டர் ஆஷா அஜித்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆஷாஅஜித் உத்திரவிட்டதையடுத்து காளையார்கோவில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.