சிவகங்கை, ஜூன் 13: சிவகங்கை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டது. சிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (27). திமுக நிர்வாகியான இவரை கடந்த ஏப்ரலில் முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல் கொலை செய்தது. இக்கொலையில் தொடர்புடைய சாமியார்பட்டியை சேர்ந்த விக்கி (எ) கருணாகரன்(20), சிவகங்கை காளவாசலை சேர்ந்த பிரபாகரன் (19), திருப்பத்தூர் அருகே நரசிங்கபுரத்தை சேர்ந்த குரு (21) ஆகியோரை சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசிஸ்ராவத், கலெக்டர் ஆஷாஅஜித்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்
0
previous post