திண்டுக்கல், மே 29: திண்டுக்கல் அருகே கருதனம்பட்டியை சேர்ந்தவர்கள் டிராவல்ஸ் உரிமையாளர் சக்திபாலன் (30). சங்கர். இருவருக்கும் முன்பகை இருந்து வந்தது.
இந்நிலையில் சக்திபாலன், தனது நண்பர்களுடன் மொண்டியபட்டி பிரிவு அருகே நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரவணபாண்டி, சங்கருக்கு ஆதரவாக சக்திபாலனிடம் தகராறில் ஈடுபட்டதுடன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக்திபாலன் புகாரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து சரவணபாண்டியை கைது செய்தனர்.