புதுடெல்லி: கொரோனா வைரசால் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் குறைவாக இருந்ததற்கு காரணம் கொழுப்பு தான் என புதிய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் இறந்தனர். இதுதொடர்பாக, அமெரிக்காவின் ஹக்கன்சாக் மெரிடியன் புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்பு மையம் எலிகளை பயன்படுத்தி புதிய ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவு குறித்து மையத்தின் ஆய்வாளர் ஜோதி நாகஜோதி கூறுகையில், ‘‘ஆண், பெண் எலிகளுக்கு கொரோனா வைரஸ் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கொரோனா வைரஸ் ஆண் எலிகளின் நுரையீரலை அதிகம் பாதிக்கின்றன. பெண் எலிகளைப் பொறுத்த வரையிலும், அவைகளின் கொழுப்பு திசுக்களை கொரோனா வைரஸ்கள் அதிகம் பாதிக்கின்றன. கொழுப்பு திசுக்களில் அதிக வைரஸ்கள் தேக்கமடைகின்றன. இதன் மூலம், நோய் எதிர்பாற்றாலால் நுரையீரல் சேதம் தடுக்கப்படுகிறது’’ என கூறி உள்ளார்….