நீடாமங்கலம், ஜூன் 11: கொரடாச்சேரி அருகே கிளரியம் கிராமத்தில் 42 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் மோகனச்சந்திரன், எம்எல்ஏபூண்டி கலைவாணன் ஆகியோர் வழங்கினார்கள். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் விஸ்வநாதபுரம் ஊராட்சி கிளரியம் கிராமத்தில் நடுத்தெருவில் வசிக்கும் மக்களுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக பட்டா வழங்க வேண்டி பல்வேறு கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்து இருந்தனர். இந்நிலையில், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஏற்பாட்டில் பட்டா வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பட்டா வழங்கும் நிகழ்ச்சி கிளரியம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் 42 நபர்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ கலைவாணி, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலச்சந்தர், தாசில்தார் சரவணகுமார், துணை தாசில்தார் அறிவழகன், கல்வி புரவலர் கலைவேந்தன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் வித்யா, வீஏஓக்கள் ராஜ்குமார், நெல்சன், அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.