மேலூர், செப். 4: கொட்டாம்பட்டி அருகேயுள்ள பாண்டங்குடியை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவரது மனைவி வினோதினி (26). சதீஸ்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வினோதினி தனது மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் வினோதினி தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். அவரது மாமியார், பூமங்களப்பட்டியில் உள்ள தனது மற்றொரு மகன் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வினோதினி திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து வினோதினி அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.