மேலூர், ஆக.7: கொட்டாம்பட்டி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொட்டாம்பட்டி அருகே காரியேந்தல்பட்டியில் அய்யனார் கோயில் புரவி எடுப்பை முன்னிட்டு, நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. உரிய அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், இந்த மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடத்திய கோயில் விழா குழுவினர் உட்பட 25 பேர் மீது, அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக, கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.