கொடைக்கானல், நவ. 16: கொடைக்கானல் மேல் மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கவுஞ்சி, உள்ளிட்ட மேல்மலை கிராம பகுதிகளில் நேற்று திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி ஆய்வு செய்தார். இந்த பகுதிகளில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிட பணி, சாலை மேம்பாட்டு பணி, உள்ளிட்ட பணிகளையும், மேல் மலைப்பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு டவர் அமைப்பதற்குரிய இடங்கள், கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள வட்டக்கானல் பகுதியில் தொலைத்தொடர்பு டவர் அமைப்பதற்குரிய இடங்களையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இந்திய தொலைதொடர்பு துறை டெபுட்டி டைரக்டர் ஜென்ரல் சத்தியபிரியதர்ஷினி, கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.