ெகாடைக்கானல், ஜூன் 27: கொடைக்கானல் டர்னர்புரம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் கம்பம் சாட்டுதல், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அம்மன் வீதி உலா, அம்மன் சப்பர பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிசட்டி எடுக்கும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த ஊர்வலம் டிப்போ காளியம்மன் கோயில் பகுதியில் துவங்கி அண்ணா சாலை, ஆனந்தகிரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது.