Tuesday, February 27, 2024
Home » கொடைக்கானல் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுமாடுகள் புகுந்ததால் பரபரப்பு: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுமாடுகள் புகுந்ததால் பரபரப்பு: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

by Ranjith

 

கொடைக்கானல், டிச. 29: கொடைக்கானல் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு மாடுகளின் கூட்டம் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அலறியடித்து ஓடினர். கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் காட்டு மாடுகள் அதிகளவில் உலா வருகின்றன. அத்துடன் பொதுமக்களையும் தாக்கி வருகின்றன. இந் நிலையில் நேற்று காலை கொடைக்கானல் பெர்ன் ஹில்சாலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் காட்டுமாடுகள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டுமாடுகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினசரி நகரின் பல்வேறு இடங்களில் காட்டு மாடுகள் உலா வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மாணவ, மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்களை நியமித்து நகர் பகுதியில் உள்ள அனைத்து காட்டு மாடுகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் நிரந்தரமாக அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

15 − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi