கொடைக்கானல், நவ. 21: மதுரையைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் நண்பர்களுடன் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். போதை தலைக்கேறிய நிலையில் கொடைக்கானல் ஏரிக்குள் குதித்து நீந்தி உள்ளார். இவருடன் வந்தவர்கள் அவரை எச்சரித்து கரைக்கு திரும்பி வர வலியுறுத்தினர். இதையடுத்து, கார்த்திக் போதையுடன் தட்டு தடுமாறி கரை ஏறி உள்ளார். இதையடுத்து இந்த பகுதியில் இருந்த சிறு வியாபாரிகள், படகு ஓட்டுனர்கள் இவரை எச்சரித்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் கார்த்திக் அவர்களை தாக்கம் முற்பட்டு ரகளையில் ஈடுபட்டு உள்ளார். தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீசாருடன் கார்த்திக் வாக்குவாதம் செய்தார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
கொடைக்கானல் ஏரியில் நீந்தி ரகளை செய்த வாலிபர்
0
previous post