கொடைக்கானல், ஜூலை 6: கொடைக்கானல் அப்பர்லேக் பகுதியில் புதிதாக சாலை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனடிப்படையில் நேற்று இந்தப் பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாயக்கண்ணன், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் நகர்மன்ற தலைவர் முகமது இப்ராகிம், நகர்மன்ற உறுப்பினர்கள் அப்பாஸ் அலி, ஜோதிமணி, விஜி, கொடைக்கானல் திமுக நகர துணை செயலாளர்கள் சக்தி மோகன், சுப்பிரமணி, கோமதி சக்திவேல், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.