திங்கள்சந்தை, ஆக. 21: கொடுப்பைக்குழியில் ரூ. 13.37 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பிரின்ஸ் எம்எல்ஏ திறந்து வைத்தார். குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைக்குழியில் அங்கன்வாடி புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரின்ஸ் எம்எல்ஏ தனது சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.13.37 லட்சம் நிதி ஒதுக்கி இருந்தார். புதிய கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழா நடந்தது. பிரின்ஸ் எம்எல்ஏ அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி உதயம், குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொன். பால்துரை, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ஒய்சிபாய், வார்டு உறுப்பினா் சுதாகர், வட்டார வளர்ச்சி அதிகாரி பத்மா, டாக்டர்கள் செல்வமணி, ஜஸ்டின், ராஜாஜி, அங்கன்வாடி ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கொடுப்பைக்குழியில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா
previous post