புழல்: உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, அரசுக்கு சொந்தமான இடம் மற்றும் பொது இடங்களில் கல்வெட்டு மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி ஆவடி மாநில நெடுஞ்சாலை துறையினர் செங்குன்றம் காமராஜர் சிலையிலிருந்து திருவள்ளூர் கூட்டு சாலை நேதாஜி சிலை வரை சாலையின் இரண்டு பக்கங்களிலும் இருந்த 20க்கும் மேற்பட்ட கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால் தற்போது சாலை விசாலமாக உள்ளது. இதற்கு பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலை துரையினருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.