உடுமலை, ஆக.21: உடுமலை அருகே உள்ள கொடிங்கியம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏவும், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவருமான ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த முகாமில் கொடிங்கியம், ஜே.என்.பாளையம் உடுக்கம்பாளையம், பெரிய பாப்பனூத்து, எரிசனம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து மனுக்களை அளித்தனர். வட்டாட்சியர்கள் சுந்தரம், சந்திரசேகரன், விவேகானந்தன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்தனர்.
முகாமில் ஒன்றிய திமுக செயலாளர்கள் செழியன், செந்தில்குமார், மெய்ஞானமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், துணைத்தலைவர் சண்முகவடிவேலு, தலைமை செயற்குழு உறுப்பினர் மொடக்குபட்டி பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணவேணி, பாரதி, சவுந்தர்ராஜன், கலாமணி, ஒன்றிய கவுன்சிலர் திலகவதி மற்றும் உடுக்கம்பாளையம் பரசிவம், ஜெ.என்.பாளையம் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.