இடைப்பாடி, ஆக.18: இடைப்பாடி அருகே கொங்கணாபுரம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட பகுதியில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். ெமாத்தம் 4500 மூட்டை பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. ெமாத்தம் ₹1.25 கோடிக்கு ஏலம் போனது. இதில் பி.டி ரகம் குவிண்டால் ₹6,450 முதல் ₹7,850 வரையும், கொட்டு ரக பருத்தி ₹3,400 முதல் ₹4,900 வரையும் விற்பனையானது.
கொங்கணாபுரத்தில் 4500 மூட்டை பருத்தி ₹1.25 கோடிக்கு ஏலம்
previous post