நிலக்கோட்டை, ஆக. 23: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி கொக்குப்பட்டி கிராமத்தில் ரேஷன் கடை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவுப்படி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழநி எம்எல்ஏவுமான ஐபி.செந்தில்குமாரின் பரிந்துரைப்படி, மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் முன்னிலையில், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி புதிய ரேஷன்கடையை திறந்து வைத்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரிசி,எண்ணெய்,பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கரிகாலபாண்டியன், மாவட்ட சிறுபான்மையினர் துணைத் தலைவர் ஜான்போஸ்கோ, ஒன்றிய பொருளாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.