நெல்லை, ஆக.5: கொக்கிரகுளத்தில் இன்று நடைபெறவிருந்த மின்தடை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை நகர்புற கோட்டத்தில் கொக்கிரகுளம் உபமின் நிலையத்தில் இன்று(5ம் தேதி) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்தன. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் பராமரிப்பு பணிகளை ஒத்தி வைத்துள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே இன்று கொக்கிரகுளம் உபமின் நிலைய பகுதிகளில் மின்தடை ரத்து செய்யப்படுகிறது.