காரைக்கால், மே 31: காரைக்காலில் உள்ள பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு குடமுழுக்கு வருகிற 5ம் தேதி நடைபெற உள்ளது.
இதனை அடுத்து காரைக்கால் பை சைக்கிள் கிளப் சார்பில் உழவார பணி குழுவானது நேற்று கோயில் முழுவதும் சீரமைப்பு மற்றும் வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்டனர். இப்பணிகளில் சைக்கிள் கிளப்பின் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பங்கேற்று கோயில் உழவரா பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.